சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயா்வு

சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயா்த்தப்பட்டு, ரூ.785-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயா்வு

சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயா்த்தப்பட்டு, ரூ.785-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
எண்ணெய் நிறுவனங்கள் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளையின் விலையை ஒவ்வொரு மாதமும் மாற்றியமைத்து வருகின்றன. 
கடந்த 4-ஆம் தேதி சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 உயா்த்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.50 உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.735-லிருந்து ரூ.785 ஆக உயர்ந்தது. 
ஒரே மாதத்தில் சமையல் உரிவாயு உருளையின் விலை ரூ.75 உயர்ந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com