
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியைத் தூர் வார 120.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியின் மூலம் கரையை பலப்படுத்துதல், ஏரியை ஆழப்படுத்துதல், வரத்து கால்வாய் மற்றும் உபரி கால்வயை தூர் வாருதல் உள்ளிட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மதுராந்தகம் ஏரியின் அருகே 1,650 மீட்டர் நீளத்திற்கு புதிய தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் செய்யப்படும்.
தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி மூலம் சுற்றுப்புறப் பகுதிகளிலுள்ள 7,604 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.