புதுச்சேரி அரசியலமைப்புக்கு உள்பட்டு  துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன்: கிரண்பேடி

புதுச்சேரி அரசியலமைப்புக்கு உள்பட்டு துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன் என கிரண்பேடி தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
கிரண்பேடி
கிரண்பேடி
Updated on
1 min read


புதுச்சேரி: புதுச்சேரி அரசியலமைப்புக்கு உள்பட்டு துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன் என கிரண்பேடி தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி அப்பதவியில் இருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டார். 

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பக்க பதிவில்,   புதுச்சேரி அரசியலமைப்புக்கு உள்பட்டு தார்மீக அடிப்படையில் துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன்.

மேலும், தனக்கு துணைநிலை ஆளுநர் பகவி அளித்து பணியாற்ற வாய்ப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. பபுதுச்சேரிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அது தற்போது மக்களின் கைகளில்தான் இருக்கிறது. புதுச்சேரி வளர்ச்சியடைய வாழ்த்துகள் என்று கிரண்பேடி கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com