

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தா. பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.