5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி முடிதிருத்துவோர் உண்ணாவிரதம்
5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி முடிதிருத்துவோர் உண்ணாவிரதம்

5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி முடிதிருத்துவோர் உண்ணாவிரதம்

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முடிதிருத்துவோர் 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி ராணிப்பேட்டையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   
Published on


ராணிப்பேட்டை: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முடிதிருத்துவோர் 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி ராணிப்பேட்டையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   

தமிழகம் முழுவதும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மருத்துவர் சமூகம் உள்ளது. சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கடந்த 30 ஆண்டுகளாக வாய்ப்பு இல்லாமல் போராடி வருகின்றனர். ஆகவே எம்.பி.சி பிரிவில் உள்ள 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டியும், சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டி தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் சலூன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் முடிதிருத்துவோர் தொழிலாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லிங்கன் முன்னிலை வகித்தார். இதில் மாநில துணை செயலாளர் ஆர். எஸ். குமார், மாவட்ட துணை செயலாளர் தில்லி குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com