திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் அம்மன் ஊஞ்சல் சேவை
செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் எழுந்தருளியுள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் மாசி மாத பௌர்ணமி மற்றும் மாசி மகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் அம்மன் ஊஞ்சல் சேவை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவையொட்டி தாய் சொர்ணாம்பிகைக்கும் உற்சவ அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக வந்து பௌர்ணமி பூஜையில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அன்னதானமும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் பு.மதுரை முத்து சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

