சங்ககிரி மலை உச்சியில் சென்னகேசவப்பெருமாள் கோயில் கோபுரத்திற்கு வர்ணம் பூச்சு

மலை உச்சியில்  உள்ள சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயிலின் கோபுரத்திற்கு பல ஆண்டுகளுக்குப் பின் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அருள்மிகு சென்னகேவப்பெருமாள் கோயிலின் கோபுரத்திற்கு திங்கள்கிழமை பூசப்பட்ட வர்ணம்.
அருள்மிகு சென்னகேவப்பெருமாள் கோயிலின் கோபுரத்திற்கு திங்கள்கிழமை பூசப்பட்ட வர்ணம்.
Published on
Updated on
1 min read

சங்ககிரி: மலை உச்சியில்  உள்ள சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயிலின் கோபுரத்திற்கு பல ஆண்டுகளுக்குப் பின் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் கோபுரத்திற்கு வர்ணம் பூச வேண்டுமென பக்தர்கள், பொதுமக்கள், பொதுநல அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட  கோரிக்கையைடுத்து பல ஆண்டுகளுக்கு பின்னர் தொல்லியல் துறையின் சார்பில் திங்கள்கிழமை கோபுரத்திற்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. 

சங்ககிரி மலையானது நிலப்பரப்பிலிருந்து சுமார் 1500 அடி உயரமும், கடல் மட்டத்திலிருந்து 2345 அடி உயரமும் கொண்டது. சங்ககிரி மலையானது 10 கோட்டை வாயில் அரண்களும், கொத்தளங்கள், கண்காணிப்பு மேடைகள், மண்டபங்கள், நீர்ச்சுனைகள், பதினைந்திற்கும் மேற்பட்ட குளங்கள், சேமிப்புக் கிடங்குகள், கோயில்கள், தர்ஹாக்கள், கொலைக்களங்கள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள் அதிகமாக உள்ளன.  

சங்ககிரி மலை உச்சியில் உள்ள அருள்மிகு சென்னகேவப்பெருமாள் கோயிலின் கோபுரம். 
சங்ககிரி மலை உச்சியில் உள்ள அருள்மிகு சென்னகேவப்பெருமாள் கோயிலின் கோபுரம். 

மலையின் உச்சியில் அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவியுடன் நின்ற நிலையில் கிழக்கு திசை நோக்கி உள்ளார். இக்கோயிலில் கடந்த பல ஆண்டுகளாக ஆவணி மாத கடைசி சனிக்கிழமையன்று புரட்டாசி மாத வழிபாடு தொடங்கி நடைபெறுவது வழக்கம். இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்று புரட்டாசி மாத விரதத்தை தொடங்குவார்கள்.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் அன்று சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள நான்கு வீதிகளில் தேர்த்திருவிழா நடைபெறும்.

இந்நிலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயிலின் கோபுரத்திற்கு வர்ணம் பூசுமாறு பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகளின் சார்பில் தொல்லியல் துறைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். 

இதனையடுத்து தொல்லியல்துறையின் சார்பில் கோயிலின் கோபுரத்திற்கு கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு வர்ணம் பூசப்பட்டது.  தொல்லியல்துறைக்கு சங்ககிரி நகர பொதுமக்கள், பக்தர்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள் நன்றி தெரிவித்தனர்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com