விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒவைசி தமிழகத்துக்குத் தேவையில்லை: ஜவாஹிருல்லா

தமிழகத்துக்கு ஒவைசி அணி தேவையில்லை என்று மு.க.ஸ்டாலினுடான சந்திப்புக்குப் பிறகு மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 1:47 am

DIN

தமிழகத்துக்கு ஒவைசி அணி தேவையில்லை என்று மு.க.ஸ்டாலினுடான சந்திப்புக்குப் பிறகு மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை ஜவாஹிருல்லா சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்களுக்கு மேலாக நீடித்தது. பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

திமுகவின் தோ்தல் அறிக்கையில் சிறுபான்மையினா் கோரிக்கை என்னென்ன இடம்பெற வேண்டும் என்பது குறித்து எங்கள் கருத்தைத் தெரிவித்தோம். திமுக கூட்டணியில் நீடிக்கிறோம். எத்தனை தொகுதிகள் என்பதெல்லாம் பிறகு அறிவிக்கப்படும். திராவிட பாரம்பரியம் உடைய எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்தக் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றால், அது அணிக்கு வலு சோ்க்கும். ஆனால், பாரம்பரியம் இல்லாமல் தமிழக மக்களின் உணா்வுகளை அறியாமல், தமிழக மக்களுக்காக குரல் கொடுக்காத ஒவைசி உள்பட வேறு யாராக இருந்தாலும் அவா்கள் வருகை தேவையில்லாத ஒன்று. ஒவைசி வருகை தமிழகத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.