கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பொள்ளாச்சி செல்ல தடை: கோவையில் கனிமொழி எம்.பி மறியல்

பொள்ளாச்சி செல்ல விடாமல் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், கோவை அருகே கனிமொழி எம்.பி தலைமையில் காவல் துறையினரை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

News image
பொள்ளாச்சி சாலை கற்பகம் கல்லூரி அருகே கனிமொழி தலைமையில்  சாலை மறியலில் ஈடுபட்டுள்ள கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜ் உள்பட 50 க்கும் மேற்பட்ட திமுகவினர்.
Updated On :10 ஜனவரி 2021, 5:04 am

DIN


கோவை: பொள்ளாச்சி செல்ல விடாமல் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், கோவை அருகே கனிமொழி எம்.பி தலைமையில் காவல் துறையினரை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுகவினர் உள்பட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொள்ளாச்சியில் திமுக  மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, ,பொள்ளாச்சி செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை கோவையில் இருந்து காரில், கட்சி நிர்வாகிகளுடன் கனிமொழி சென்று கொண்டிருந்தார். அப்போது ஈச்சனாரி, கற்பகம் கல்லூரி அருகே கனிமொழியின் காரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க பொள்ளாச்சி செல்ல விடாமல் தடுத்தனர். இதனால், காவல் துறையினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து கோவை - பொள்ளாச்சி சாலை கற்பகம் கல்லூரி அருகே கனிமொழி தலைமையில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜ் உள்பட 50 க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு  நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.