தம்மம்பட்டி பகுதிகளில் ஜல்லிக்கட்டு  காளைகளுக்கு தீவிர பயிற்சி!

சேலம் மாவட்டத்தில், வரும் 17 ஆம் தேதி முதல் ஜல்லிக்கட்டு நடத்த, அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, தம்மம்பட்டி பகுதியில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தம்மம்பட்டி பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி
தம்மம்பட்டி பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

தம்மம்பட்டி: சேலம் மாவட்டத்தில், வரும் 17 ஆம் தேதி முதல் ஜல்லிக்கட்டு நடத்த, அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, தம்மம்பட்டி பகுதியில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகை வருகிற 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போதும் கிராமப்புறங்களில் ஜல்லிக்கட்டு உள்பட, பல வீர விளையாட்டுக்கள் நடைபெறுவது வழக்கம். மதுரை, பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பிரசித்தி பெற்றது. 

இதில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை தம்மம்பட்டி, கூலமேடு, வாழப்பாடி பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.  இதனிடையே இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு விழா நடத்த அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதாட்டம் நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த, அரசு அனுமதித்துள்ளது. 

நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும். திறந்த வெளியில் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாடுபிடி வீரர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு அதில் தொற்று இல்லை என்ற சான்று கட்டாயம் இருக்க வேண்டும். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பார்வையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை, அரசு விதித்துள்ளது. 

இதனிடையே, சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கூலமேடு. கடம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வரும் 17ம் தேதி முதல் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதியளித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில், தம்மம்பட்டி பகுதியில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, அதன் உரிமையாளர்கள் பல்வேறு விதமான பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com