பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்ட விசாரணையை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்ட நில அளவீட்டுக்கான விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
IDPL
Updated On :13 ஜனவரி 2021, 9:39 am

DIN

திருப்பூர் மாவட்டத்தில் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்ட நில அளவீட்டுக்கான விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஐடிபிஎல் எண்ணெய் குழாய்  திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது

கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெங்களூரு தேவனகொந்தி வரை ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதில், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆகவே, இந்தத் திட்டத்தைச் சாலையோரமாகக் கொண்டு செல்லக்கோரி 6 மாவட்ட விவசாயிகள் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அந்தந்த மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்படி திருப்பூர் மாவட்டத்திலும் வருவாய்க் கோட்டாட்சியர், தெற்கு வட்டாட்சியர், காவல் துறை அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தமிழக அரசு ஐடிபிஎல் திட்டம் குறித்து மறு அறிவிப்பு வரும் வரையில் இந்தத் திட்டம் தொடர்பான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்று வாய்மொழியாக உறுதியளிக்கப்பட்டது.

இதனிடையே, காங்கயம் வட்டம் படியூர், சிவன்மலை, கீரனூர், மறவாபாளையம் கிராம் விவசாயிகளை வரும் ஜனவரி 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இது அரசின் மீது விவசாயிகளுக்கு உள்ள நம்பகத்தன்மையைப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐடிபிஎல் திட்ட அளவீட்டுக்கான விசாரணையை ரத்து செய்வதுடன், இந்தத் திட்டத்தைச் சாலையோரமாகச் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.