
ஆற்காடு: ஆற்காடு நகர திமுக சார்பில் திருவள்ளுவர் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு நகர செயலாளர் ஏ.வி சரவணன் தலைமை வகித்தார். அவைதலைவர் பொன்ராஜசேகர், மாவட்ட பிரதிநிதிகள் கஜேந்திரன், சிவா,லிங்கேஷ், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் ஆ.ப. கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆற்காடு தொகுதி எம் எல் ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட திமுக துணை செயலாளர் ஏ.கே.சுந்தர மூர்த்தி ஆகியோர் பஜார் வீதியில் உள்ள திருவள்ளுவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.
விழாவில் பொதுக்குழு உறுப்பினர் பி.என்.எஸ். ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆற்காடு நகர தமிழ்வளர்ச்சி மன்றம் சார்பில் கவிஞர் மா.ஜோதி தலைமையில் பொற்கோ வாசுதேவன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.