பல்லடம்: எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் நலத் திட்ட உதவிகள்

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி பல்லடத்தில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேருந்து நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பல்லடத்தில் அதிமுக சார்பில் எம்.ஜீ.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேண்ட், சர்ட் துணி, சேலை மற்றும் தையல் கூலி ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை வழங்குகிறார் பல்லடம் சட்டப்பேரவை உறு
பல்லடத்தில் அதிமுக சார்பில் எம்.ஜீ.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேண்ட், சர்ட் துணி, சேலை மற்றும் தையல் கூலி ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை வழங்குகிறார் பல்லடம் சட்டப்பேரவை உறு

பல்லடம்: எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி பல்லடத்தில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேருந்து நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.சித்துராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர் ஏ.எம்.ராமமூர்த்தி வரவேற்றார். இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேண்ட், சர்ட் துணி, சேலை மற்றும் தையல் கூலி, போக்குவரத்து காவலர்களுக்கு இரவில் ஒளிரும் பட்டையுடன் கூடிய சர்ட், பொதுமக்களுக்கு அன்னதானம் ஆகியவற்றை பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது, பல்லடம் தொகுதிக்கு தற்போதைய எம்.எல்.ஏ.நடராஜன் என்ன செய்தார் என்று திமுக போன்ற எதிர்கட்சியினர் சிலர் கேட்கின்றனர்.

அவர்களிடம் நான் கேட்பது எல்லாம் நான் தொகுதிக்கு என்ன செய்யவில்லை என்று கூறுங்கள் என்று தான். பல்லடத்திற்கு அரசு கலைக்கல்லூரி,கால்நடை மருத்துவமனை, கோழியின ஆராய்ச்சி மையம், பல்லடம் கல்வி மாவட்ட அலுவலகம், மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், மங்கல் சாலை விரிவாக்கம், மண் சாலையே இல்லை என்ற அளவிற்கு தார் சாலை வசதி, தேவையான இடங்களில் தெரு விளக்கு வசதி, முதலிபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி, அவிநாசிபாளையத்தில் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் மற்றும் குடியிருப்பு வசதி உள்பட சாதனை பட்டியல் போட்டு வெளியிடும் வண்ணம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்லடம் நகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கானும் வகையில் கோவை சாலையில் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்திலிருந்து திருப்பூர் சாலை குங்குமம்பாளையம் வழியாக திருச்சி சாலையில் மாதப்பூரில் இணைக்கும் புறவழிச்சாலை திட்டம் விரைவில் அரசால் அறிவிப்பு வெளியாகவுள்ளது.

கணபதிபாளையம் ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா இடத்திற்கு குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி செய்து கொடுத்து பட்டாதாரர்களுக்கு  வீட்டு வரி ரசீதை ஊராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும்.

தவறினால் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து  அறவழியில் போராடவும் நான் தயங்க மாட்டேன் என்றார். இவ்விழாவில் திருப்பூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் வி.எம்.சண்முகம், மாவட்ட பொருளாளர் வி.ஹரிகோபால், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் புத்தரச்சல் பாபு, நகராட்சி முன்னாள் துணைத்தலைவர்கள் சூ.தர்மராஜன், வைஸ் பி.கே.பழனிசாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் எம்.கே.ஆறுமுகம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் ப.நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com