
திருச்சியில் நடைபெற்ற 32-ஆவது தேசிய சாலைப் போக்குவரத்து வாரவிழாவில் மகளிர் காவர்கள் தலைக்கவசம் அணிந்து பேரணியில் பங்கேற்றனர்.
திருச்சியில், 32-ஆவது தேசிய சாலை பாதுகாப்பு வாரவிழாவை ஒட்டி, தலைக்கவச விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியா சு.சிவராசு, மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பேரணி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் தொடங்கி தலைமை அஞ்சலகம் எம்ஜிஆர் சிலை வழியாக மாவட்ட ஆட்சியரகத்தை அடைந்தது. தலைக்கவசம் அணிந்த மகளிர் காவலர்கள் பேரணியில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.