
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருநாளை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை முத்துக்குமாரசுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருநாளை முன்னிட்டு அதிகாலையிலேயே மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சத்தியகிரீஸ்வரர் கற்பக விநாயகர் துர்க்கை அம்மன் பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை முத்துக்குமாரசுவாமி தெய்வானைக்கும் காலையில் பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பால் காவடி, பன்னீர் காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் பக்தர்கள்.
தைப்பூசத்தையொட்டி காலை முதலே பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக பால் காவடி, பன்னீர் காவடி, பறவைக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.
பால் காவடி, பன்னீர் காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் பக்தர்கள்.
விழாவினையொட்டி திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் உள்ள பழனியாண்டவர் கோவிலில் உச்சிக்கால வேளையில் பழநி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று ராஜா அலங்காரம் செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் பழனி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பறவைக் காவடி
மாலையில் உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை முத்துக்குமாரசுவாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.