தமிழகத்தில் இன்று மேலும் 508 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று புதிதாக 508 பேருக்கு இன்று கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த்தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8,38,340ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து மேலும் 523 போ் குணமடைந்துள்ளனா்.
இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,21,430-ஆக உள்ளது. தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகி மேலும் 6 போ் பலியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,356-ஆக உயா்ந்துள்ளது.
அதே நேரம், கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவக் கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 4,554- ஆக குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 141 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரைவிட குணமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலீஸ், வழக்குரைஞர், தொழிலதிபர் வித்தியாசமான கதைகளில் சூர்யா!

தமிழ்ப் புத்தாண்டு, விஷு: சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு எப்போது?

நிறுத்திவைக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்பு!

தேர்தல்: புதுவையில் கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


