
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாமை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) காலை தொடங்கி வைத்தார்.
இது குறித்து தமிழ கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தது :
நாகை மாவட்டத்தில் கிராம புறங்களில் அமைக்கப்பட்டுள்ள 932 முகாம்கள் உள்பட 1027 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெறுகிறது.
இந்த முகாம்களில் 143652 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணியில் 4, 141 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து வசதியில்லாத 11 உள்கிராமங்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.