தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

காஞ்சிபுரத்தில் ரெளடி வெட்டிக்கொலை

காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் முகம் சிதைந்த நிலையில் ரெளடி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

கொலை செய்யப்பட்ட ரெளடி தமிழ்வேந்தன்

Updated On :2 ஜூலை 2021, 6:13 am

காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் முகம் சிதைந்த நிலையில் ரெளடி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே காவித் தண்டலம் கிராமத்தில் எட்டியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் தமிழ்வேந்தன்(25). இவர் அதே கிராமத்தில் வயல்வெளியில் முகம் சிதைந்த நிலையில் வெட்டப்பட்டு சடலமாக கிடந்தார். இதை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலறிந்து வந்த சாலவாக்கம் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் சம்பவ இடத்தில் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். 

உயிரிழந்த தமிழ் வேந்தன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன.  சம்பவம் தொடர்பாக சாலவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.