'டோக்கியோவினை நோக்கி சாலை' எனும் தலைப்பில் வினாடி வினா போட்டி 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் இணைந்து  “டோக்கியோவினை நோக்கி சாலை“எனும் தலைப்பில் வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது.
'டோக்கியோவினை நோக்கி சாலை' எனும் தலைப்பில் வினாடி வினா போட்டி 
'டோக்கியோவினை நோக்கி சாலை' எனும் தலைப்பில் வினாடி வினா போட்டி 
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் இணைந்து  “டோக்கியோவினை நோக்கி சாலை“எனும் தலைப்பில் வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது.

இணையதளம் (https//fitindia.gov.in/quiz-) மூலம் இந்த வினாடி வினா போட்டிகள் 23.06.2021 முதல் 22.07.2021 வரை நடத்தப்பட்டு வருகிறது.

வினாடி வினா போட்டிக்கானவழிமுறைகள்:-
1. போட்டிகள் 120 வினாடி (2 நிமிடம்) மட்டுமே நடைபெறும்.
2. போட்டியில் 10 கொள்குறி வினாக்கள் கேட்கப்படும்.
3. வினாக்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் ஹியதியில் மட்டும் இடம் பெற்றிருக்கும்.
4. வினாவானது ஒலிம்பிக் வரலாறு, விளையாட்டு தொடர்பான கேள்விகள், முன்னால் வீரர் / வீராங்கனைகள் பெற்ற சாதனைகள், உலக சாதனைகள், கடந்த மற்றும் தற்போதைய சாதனைகள் மற்றும் சாதனையாளர்கள் தொடர்பான கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.
5. போட்டியில் ஒருவர் ஒருமுறை மட்டுமே பங்கு பெற முடியும்.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் மற்றும் இளைஞர் நலன் அலுவலர், சென்னை தொலைபேசி 7401703480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com