பக்தர்களின்றி சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றம்
சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றம்

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கரோனா ஊரடங்கை முன்னிட்டு பக்தர்கள் அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றம் முடிந்தவுடன் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் ச.கனகசபேச  தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். கொடியேற்றத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுர வாயிலில் சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ், வட்டாட்சியர் ஆனந்தன் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொடியேற்றம் முடிந்த பின்னர் 8 மணிக்கு மேல் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

உத்சவ விபரம் வருமாறு: ஜூலை 7-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதி உலா, 8-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதி உலா, 9-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதி உலா, 10-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா (தெருவடைச்சான்), 11-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, 12-ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, 13-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும், ஜூலை 14-ம் தேதி புதன்கிழமை தேர்த்திருவிழாவும் பக்தர்கள் அனுமதியின்றி கோயில் உள் பிரகாரத்திலேயே பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறுகிறது. 

பின்னர் ஜூலை ஜூலை 14-ம் தேதி இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை 15-ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி உள் பிரகாரத்தில் உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களின் கமிட்டி செயலாளர்  தி.ஆ.ராஜகணேச தீட்சிதர், துணைச் செயலாளர் ஆர்.ரத்தினசபாபதி தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் ச.கனகசபேச தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர். கரோனா ஊரடங்கை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரணியன் உத்தரவின் பேரில் பக்தர்கள் அனுமதியின்றி தினந்தோறும் கோயில் உள் பிரகாரத்திலேயே சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

ஜூலை 14ம் தேதி நடைபெற இருந்த தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டு உள் பிரகாரத்திலேயே வீதிஉலா நடைபெறுகிறது. பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை.15-தேதி வியாழக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர். 

பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரம்: 7-7-2021 முதல் 13- 7- 2021 வரை காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.  14 -7 0202 தேர் திருவிழா அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜரை தரிசிக்கலாம் என்றும், 15- 7 -2021 ஆனித்திருமஞ்சன தரிசனத்தன்று, தரிசனம் முடிந்த பிறகு மாலை பொதுமக்கள் கோயிலுக்குள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று பொது தீட்சிதர்கள் அறிவித்துள்ளனர்.
                                                                     
பக்தர்கள் அதிருப்தி: கரோனா ஊரடங்கை முன்னிட்டு பொதுதீட்சிதர்கள் கோயில் உள்ளேயே பக்தர்கள் அனுமதியின்றி தொன்று தொட்டு நடைபெற்று வரும் உற்சவத்தை நடத்துவதாக சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆனால் அவர் உற்தவம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டார். 
நடராஜர் பெருமானின் ஆட்டத்தில் இயங்கும் உலகத்தின் நன்மையை கருதி நடைபெறும் உற்சவத்திற்கு தடை விதித்ததால் பக்தர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். தனியாரான பொதுதீட்சிதர்கள் வசம் நிர்வாகம் உள்ள நடராஜர் கோயிலில் உலகத்திற்கே சபாநாயகரான நடராஜப்பெருமானின் உற்சவத்தை நிறுத்த முடியாது. உலக நன்மையை கருதி நடைபெறும் இந்த உற்சவத்தை கரோனா ஊரடங்கை முன்னிட்டு பக்தர்கள் அனுமதியின்றி கோயில் உள்ளேயே நடத்துவதாக பொதுதீட்சிதர்கள் அறிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியனிடம் மனு அளித்து முறையிட்டனர். 

அதன் பின்னர் பக்தர்கள் அனுமதியின்றி கோயில் உள்ளே பொதுதீட்சிதர்கள் மட்டும் பங்கேற்று கொடியேற்றம் நிகழ்ச்சியை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com