
மத்திய அரசு மீண்டும் படங்களை தணிக்கை செய்வது நியாயமற்றது என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவு திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த 2019-ஆம் ஆண்டும் பிப்ரவரி 12-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2021-இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தத் திருத்த மசோதாவின்படி, ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்களை மீண்டும் தணிக்கை செய்ய கோருவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்படும்.
மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு திரைப்படத் துறையினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்த சட்டத்திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறிவிடும் என்று அவா்கள் கூறுகின்றனா்.
இதனிடையே மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவுக்கு ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய அரசு மீண்டும் படங்களை தணிக்கை செய்வது நியாயமற்றது. இந்த மசோதா மூலம் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு வரும். எந்த படத்தையும் நினைத்தபடி எடுக்க முடியாது.
இயக்குநர் நினைக்கும் படைப்புகளை எடுக்க முடியாது. கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தாக இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.