
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
பின்னர் தில்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைத்தனர். விசாரணையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதையடுத்து அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
சிவசங்கர் பாபா மீது ஏற்கெனவே இரண்டு போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் மேலும் ஒரு வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.