விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மன்னார்குடி: எங்கே எனது தடுப்பூசி எனக் கேட்டு இளைஞர் பெரு மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூரில்  செவ்வாய்க்கிழமை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில், எங்கே எனது தடுப்பூசி என்று கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

News image
மன்னார்குடி அரசு மருத்துவமனை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர் பெருமன்றத்தினர்.
Updated On :13 ஜூலை 2021, 9:18 am

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூரில்  செவ்வாய்க்கிழமை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில், எங்கே எனது தடுப்பூசி என்று கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டிய 14 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தடுப்பூசி உற்பத்தியை பொதுத் துறை நிறுவனங்கள் போர் கால அடிப்படையில்  உற்பத்தி செய்ய  வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வழங்கக் கூடாது. 

செங்கல்பட்டில் உள்ள எச்எல்எல் தடுப்பூசி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தடுப்பூசி வழங்குவதில் தமிழ்நாட்டுக்கு பாகுபாடு காட்டக்கூடாது.

மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இளைஞர் பெருமன்ற நகரத் தலைவர் ஆர்.சார்லஸ் விக்டர் தலைமை வகித்தார். நகரச் செயலர் சிவ.ரஞ்சித் முன்னிலை வகித்தார்.

மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் துரை. அருள்ராஜன் தலைமை வகித்தார்.

மன்னார்குடி ஒன்றியச் செயலர் எஸ்.பாப்பையன், ஒன்றியத் தலைவர் ஏ.பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதே கோரிக்கைகளுக்காக கோட்டூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இளைஞர் பெருமன்ற ஒன்றியத் தலைவர்  எம்.சாந்தகுமார் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் எம். நல்லசுகம் முன்னிலை வகித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் சேகுவேரா தாஸ் தொடங்கி வைத்தார். கோரிக்கையை விளக்கி சிபிஐ  மாவட்டச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான வை.சிவபுண்ணியம் பேசினார். இதில், சிபிஐ ஒன்றியச் செயலர் எம். செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.