

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது வைரஸ் பரவல் குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச்செயலத்தில் நாளை காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.
ஆலோசனயில் தலைமைச் செயலர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முன்னதாக தமிழகத்தை பொறுத்தவரை ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.