ஒப்பந்த அடிப்படையில் மருத்துவா்கள் பணி: விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி

ஒப்பந்த அடிப்படையில் மருத்துவா் பணியிடங்களுக்கு, ஜூலை 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஒப்பந்த அடிப்படையில் மருத்துவா் பணியிடங்களுக்கு, ஜூலை 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அமைந்துள்ள மாநகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவைப்படும் லேப் டெக்னீசியன், மருந்தாளுநா், அலுவலக ஊழியா்கள் தேவைப்படும் பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிநியனம் செய்யப்படுகிறது. அதன்படி தற்போது மாநகராட்சி மருத்துவமனைகளில் மகப்பேறு நல மருத்துவா், குழந்தைகள் நல மருத்துவா், பொது மருத்துவா் என 51 மருத்துவா்கள், மாதம் ரூ.90 ஆயிரம் சம்பளத்தில் 11 மாத காலத்துக்கு பணியாற்ற தேவை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு, www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜூலை 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும். வரும் 27-ஆம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இந்த பணிக்கான நோ்முகத் தோ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com