டிசம்பர்- 2020 இல் நடைபெற்ற துறைத்தேர்வு முடிவுகள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி
டிசம்பர்- 2020 இல் நடைபெற்ற துறைத்தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


சென்னை: டிசம்பர்- 2020 இல் நடைபெற்ற துறைத்தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 14.02.2021 முதல் 21.02.2021 வரை நடத்தப்பட்ட டிசம்பர் 2020க்கான துறைத் தேர்வுகளில், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்து எஞ்சியுள்ள 14 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மொழிகளுக்கான வாய்மொழித் தேர்வு முடிவுகள் வரும் 28 ஆம் தேதி தேர்வாணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மே 2021 துறைத் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு ஜூலை 31 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...