கீழடி அகழாய்வு தளத்துக்கு புதிய சாலை: அமைச்சர் எ.வ. வேலு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு தளத்திற்கு செல்ல புதிய சாலை அமைக்கப்படும் என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழாய்வுத்தளம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழாய்வுத்தளம்.
Published on
Updated on
2 min read



மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு தளத்திற்கு செல்ல புதிய சாலை அமைக்கப்படும் என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

கீழடியில் தற்போது தமிழக அரசின் சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கீழடியின் விரிவாக்கமாக அருகே உள்ள அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

கீழடி அகழாய்வுத்தளம்

மணலூரைத் தவிர்த்து கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் தினமும் பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கீழடி அகழாய்வு தளத்தைக் காண பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது. தினமும் ஏராளமானோர் கீழடி அகழாய்வு தன் தளத்திற்கு வந்து அங்கு நடைபெறும் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். மேலும் கீழடியில் அகழ் வைப்பகம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் நடந்து வருகிறது. 

கீழடி செல்லும் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.

இந்நிலையில், திருப்புவனம் அருகே மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் இருந்து கீழடி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் இருப்பதால் இந்த சாலையை புதுப்பித்து தர வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் மதுரையில் கடந்த வியாழக்கிழமை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில்  தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார்.

கீழடி செல்லும் சாலை

அப்போது பொதுமக்கள் மற்றும் தமிழார்வலர்களின்  கோரிக்கையை ஏற்று கீழடி அகழாய்வு தளத்திற்குச் செல்ல புதிய சாலை அமைக்கப்படும் என அறிவித்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்களும் தமிழார்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com