‘இந்தியாவின் மகளே...’: ஒலிம்பிக் பதக்கம் வென்ற மீராபாய்க்கு ராகுல்காந்தி வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றுள்ள மீராபாய் சானு 49 கி பளு தூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஒலிம்பிக் போட்டியின் முதல் நாளிலேயே பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு வாழ்த்துகள். இந்தியாவே தனது மகளை நினைத்து பெருமை கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
பதக்கம் வென்ற மீராபாய் பானுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

