தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், லெட்சுமாங்குடி பாலத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர். ஊர்வலம், வடபாதிமங்கலம் பிரதான சாலை, அரசு மருத்துவமனை சாலை வழியாக, வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது. தொடர்ந்து, கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். நோயாளிகளையும், பிரசவ தாய்மார்களையும் மன்னார்குடி, திருவாரூர் மற்றும் தஞ்சாவூருக்கு அனுப்பி அலைக்கழிக்காமல் இருக்க மருத்துவமனையை தரம் உயர்த்திட வேண்டும்.நகரப் பகுதியில் வாழும் விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டமான 100 நாள் வேலையை, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கும் அமல்படுத்திட வேண்டும்.