ஆண்டிபட்டியில் மீன் கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஆண்டிபட்டி, சக்கம்பட்டியில் மீன் கடை உரிமையாளர் வீட்டில் செவ்வாய்கிழமை, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே.

ஆண்டிபட்டி, சக்கம்பட்டி பகுதியில் உள்ள சீதாராம்தாஸ் நகரில் வசித்து வருபவர் ஜாகீர் உசேன்(55). இவர், ஆண்டிபட்டியில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், செவ்வாய்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ஜாகீர் உசேன் வீட்டின் மீது எறிந்துள்ளனர். இதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜாகீர் உசேனின் கை மற்றும் கால்களில் தீக்காயம் ஏற்பட்டது.

பெட்ரோல் குண்டு வெடித்ததால் ஏற்பட்ட சத்தத்தில், பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் வந்து பார்த்து ஜாகீர் உசேனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டுபிடிக்க, அப்பகுதியில் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை  காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com