

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
தொழில் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அடையார் ஆனந்தபவன் உணவகத்தின் சிஎஸ்ஆர் நிதியில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக 6 தனியார் நிறுவனங்கள் ரூ.2.37 கோடியில் 36,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவிலேயே சிஎஸ்ஆர் பங்களிப்புடன் முதன்முறையாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழ்நாடு தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.