கோப்புப்படம்
கோப்புப்படம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2ல் தமிழகம் வருகை

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
Published on


புதுதில்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

சென்னை மாகாணமாக இருந்தபோது, அப்போது முதன்முறையாக மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டப்பேரவை 1921 - ஆம் ஆண்டு ஜனவரி 12 - ஆம் தேதி (புனித ஜாா்ஜ் கோட்டையில்) தொடங்கிவைக்கப்பட்டது.

அதை நினைவுபடுத்தும் வகையிலும், தனித் தன்மையோடு செயல்பட்ட சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த விழாவிற்கு தலைமை தங்கி விழாவை நடத்திடவும், இந்தவிழாவின் போது முன்னாள் முதல்வா் கருணாநிதியின் திருவுருவப்படத்தை சட்டபேரவை வளாகத்தில் திறந்து வைக்கவும், மேலும் மதுரையில் அமைய இருக்கின்ற கலைஞா் கருணாநிதி பெயரிலான நூல் நிலையத்தின் அடிக்கல் நாட்டவும், இத்தோடு, சென்னை கிண்டியில் அமையவுள்ள அரசு மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழா, நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டை குறிக்கக் கூடிய வகையில் சென்னை கடற்கரை சாலையில் அமைய இருக்கின்ற நினைவு தூண் அடிக்கல் நாட்டுவிழா ஆகியவற்றையும் நடத்தித் தரவும் நேரில் வர அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவரும் இசைவு தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு தில்லியில் புறப்படும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நண்பகல் 12.45 மணிக்கு சென்னை வந்தடைகிறார். மாலை 5 மணிக்கு நடைபெறும் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com