
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாவது பரவலை தடுக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாா்வையிட்டு, பணிகளை முடுக்கிவிடும் பணிகளில் தொடா்ச்சியாக ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில், மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை காலை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவா்களின் ஆலோசனைப்படி அவா் தனது ஆட்சியர் முகாம் அலுவலகத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவர்களின் அறிவுரையின்பேரில் மருந்துகளையும் எடுத்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.