
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அம்மா உணவகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் விழாவை வியாழக்கிழமை கொண்டாடிய திமுகவினர், நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் உணவருந்தும் அனைவரின் கட்டணத்தையும் திமுகவினரே நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்தினர்.
மணப்பாறையில் அம்மா உணவகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் விழாவை திமுகவினர் வியாழக்கிழமை கொண்டாடினர். அம்மா உணவகத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய திமுகவினர், அம்மா உணவக பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் உணவருந்தும் அனைவரின் கட்டணத்தையும் திமுக முன்னாள் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் மிலிட்டரி ந.முருகன் நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்திநார். மாவட்ட கவுன்சிலர் பாலசுப்பிரமணியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.ஏ.குழந்தைவேல், முன்னாள் மாவட்ட பிரதிநிதி பொறியாளர் சீனிவாசன், முன்னாள் இளைஞரணி நிர்வாகிகள் மணிகண்டன், பாஸ்கர் மற்றும் அழக்ர்சாமி உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவருந்த வந்த பொதுமக்களுக்கு இனிப்புகளுடன் உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அனைவருக்கும் முக கவசம் அளிக்கப்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் மகிழ்ச்சியுடன் உணவருந்தினர்.
அதேபோல், திமுக நகர செயலாளர் கீதா ஆ.மைக்கில்ராஜ் தலைமையில் திமுகவினர் மேட்டுக்கடை விடிவெள்ளி சிறப்பு இல்லத்தில் உள்ள முதியோர் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு இனிப்புகள் உடன் காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணைச்செயலர் காசிநாதன், டி.ஜேம்ஸ், ஆர்.பி.எஸ்.சரவணன், பர்மா நிஜாமுதீன், தையல்நாயகி சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.