முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சங்ககிரி திமுக ஒன்றிய அலுவலக வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு டி.எம்.செல்வகணபதி, நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சங்ககிரி திமுக ஒன்றிய அலுவலக வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு டி.எம்.செல்வகணபதி, நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

சங்ககிரியில் திமுக முன்னாள் தலைவர் பிறந்தநாள் விழா

சேலம் மாவட்டம், சங்ககிரி ஒன்றிய, நகர திமுக சார்பில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா திமுக ஒன்றிய அலுவலக வளகாத்தில் வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டன.
Published on


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஒன்றிய, நகர திமுக சார்பில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா திமுக ஒன்றிய அலுவலக வளகாத்தில் வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டன.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி சங்ககிரி ஒன்றிய, நகரத்தின் சார்பில் சங்ககிரி ஒன்றிய அலுவலகவளாகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மேற்கு மாவட்ட  செயலர் (பொறுப்பு) டி.எம்.செல்வகணபதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஏழைகள் 150 பேருக்கு இனிப்புகளுடன், உணவு வழங்கினார்.  

மேற்கு மாவட்ட துணைச் செயலர் க.சுந்தரம்,  தலைமை  பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பி.நிர்மலா, ஒன்றியச் செயலர் (பொறுப்பு) கே.எம்.ராஜேஷ், முன்னாள் ஒன்றியச் செயலர் பி.தங்கமுத்து, முன்னாள் எம்எல்ஏ ஆர்.வரதராஜன், நகரச் செயலர் (பொறுப்பு) எல்ஐசி சுப்ரமணியன், விவசாய அணி அமைப்பாளர் கேஜிஆர்.ராஜவேலு, முன்னாள் நகரச் செயலர் கே.எம்.முருகன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ், தளபதி சண்முகம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com