வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு புதுவரவு: சிம்பன்ஸி கௌரி குட்டியை ஈன்றது

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு புதுவரவு வந்துள்ளது. அங்குள்ள கௌரி என்று அழைக்கப்படும் சிம்பன்ஸி ரக குரங்கு குட்டியை ஈன்றுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு புதுவரவு: சிம்பன்ஸி கௌரி குட்டியை ஈன்றது
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு புதுவரவு: சிம்பன்ஸி கௌரி குட்டியை ஈன்றது


சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு புதுவரவு வந்துள்ளது. அங்குள்ள கௌரி என்று அழைக்கப்படும் சிம்பன்ஸி ரக குரங்கு குட்டியை ஈன்றுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிம்பன்ஸிகளான கொம்பே (28), கௌரி (23) தம்பதி மிகவும் புகழ்பெற்றவர்கள். இவர்கள் தற்போது மகிழ்ச்சியான தம்பதியாகவும் மாறியுள்ளார்கள். கடந்த 9-ஆம் தேதி சிம்பன்ஸி கௌரி குட்டியை ஈன்றுள்ளது. தற்போது தாயும் குட்டியும் நலமாக உள்ளார்கள். கால்நடை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2005-ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி சிங்கப்பூர் உயிரியல் பூங்காவிலிருந்து இந்த சிம்பன்ஸி ஜோடி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வரவழைக்கப்பட்டது.  இவர்களுக்கு கொம்பே - கௌரி என பெயர் சூட்டப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களை இவர்கள் அதிகம் கவர்ந்ததால், இவர்களை ராக்ஸ்டார் தம்பதி என்று ஊழியர்கள் அழைப்பது வழக்கம். தற்போது கௌரி சிம்பன்ஸி குட்டி ஈன்றிருப்பது, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு புதிய வரவாக அமைந்துள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டிருக்கிறது. பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, விரைவில் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டால், இந்த புதிய வரவை மக்கள் கண்டு களிக்க வழிவகை ஏற்படலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com