வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத ஸ்வாமி கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா  நடைபெற்றது.
வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
Published on
Updated on
1 min read

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத ஸ்வாமி கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா  நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நவ கிரகங்களில் செவ்வாய் பகவான் செல்வ முத்துக்குமார சுவாமி சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

பக்தர்களின் நோய்களைப் போக்கும் வைத்தியநாத சுவாமி:  இக்கோவிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி அம்பாளை தரிசித்து கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.

கும்பாபிஷேகம் முடிந்து 48 நாள்கள் மண்டல பூஜைகள் நடைபெற்றன 48-ஆம் நாள் முடிவில் மண்டல பூஜை பூர்த்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27 -ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இரண்டு கால யாகசாலை பூஜைகள் மற்றும் கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் விநாயகர் சண்டிகேஸ்வரர் செவ்வாய் பகவான் சுவாமி அம்பாள் மற்றும் செல்வ முத்துக்குமார சுவாமியை எழுந்தருளச் செய்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது சுவாமி அம்பாளுக்கு 1008 கலச அபிஷேகமும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. முன்னதாக ருத்ர வேத பாராயணம் ஜபம் திருமுறைகளை பாராயணம் ஆகியவை நடத்தப்பட்டன. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. யாக பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளை 50-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். அரசின் கரோனா வழிகாட்டுதலை பின்பற்றி இந்த பூஜைகள் நடத்தப்பட்டன. அதனால் சிவாச்சாரியார்கள் திருமடம் மற்றும் கோவில் சிப்பந்திகள் உள்ளிட்டவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com