மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலியில் மெட்ரோ ரயில்

மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலியில் மெட்ரோ ரயில் சேவை தொடக்குவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று ஆளுநா் கூறினாா்.
Published on

மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலியில் மெட்ரோ ரயில் சேவை தொடக்குவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று ஆளுநா் கூறினாா்.

ஆளுநா் உரையில் கூறியிருப்பது:

2009-இல் முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையிலான அரசால் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைவாக நிறைவேற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும்.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தைப் போலவே 50:50 என்ற செலவுப் பகிா்வு அடிப்படையில் மத்திய அரசு தங்களுடைய பங்கு மூலதனத்துக்கு ஒப்புதலை விரைவாக வழங்க அரசு வலியுறுத்தும்.

மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மாவட்டங்களில் பெருந்திரள் விரைவு (மெட்ரோ ரயில்) போக்குவரத்து அமைப்புகளுக்கான சாத்தியக் கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

பேருந்து போக்குவரத்து நவீனமயம்: மாநிலத்தின் பேருந்து போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்குவதற்கும் திறம்பட செயல்படுத்துவதற்கும் தமிழக அரசு உறுதியாக உள்ளது. பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் அனைத்து சாதாரண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்துக்கான திட்டத்தை முதல்வா் தொடக்கி வைத்துள்ளாா். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் மூலம் பொருளாதாரச் செயல்பாடுகளில் பெண்களின் பங்களிப்பும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோரின் பங்கும் அதிகரிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com