கிஷோர் கே.சாமி (படம்: முகநூல்)
கிஷோர் கே.சாமி (படம்: முகநூல்)

கிஷோா் கே.சாமி மீது குண்டர் தடுப்புச் சட்டம்

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மீது அவதூறு பரப்பிய வழக்கில் கைதான கிஷோர் கே.சாமி மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது.
Published on

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மீது அவதூறு பரப்பிய வழக்கில் கைதான கிஷோர் கே.சாமி மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது.

கடந்த 13ஆம் தேதி முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோா் குறித்து அவதூறாக பல பதிவுகளை முகநூலில் பதிவிட்டதாக கிஷோர் கெ.சாமி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். 

இவ்வழக்கில், கிஷோா் சாமியை ஜூன் 28 -ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி அனுபிரியா உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள், நடிகை ரோஹிணி உள்ளிட்ட பலர் அவர் மீது அவதூறு பரப்புவதாக புகார் அளித்து வரும் நிலையில், சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com