கரோனாவை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி இருக்கிறோம்: முதல்வர் ஸ்டாலின்

கரோனாவை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி இருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரோனாவை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி இருக்கிறோம்: முதல்வர் ஸ்டாலின்

கரோனாவை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி இருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர், டெம்பிள் ஸ்கூலில் நடைபெற்ற பொதுநலச் சங்கங்களின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரை, இங்கே பேசுகிற போது என்னுடைய அன்பிற்குரிய சகோதரர் ஒரு கருத்தை சொன்னார்கள், இன்றோடு நாங்கள் பொறுப்பேற்று 50 நாட்கள் ஆகின்றது. இந்த 50 நாட்களும் நாங்கள் ஆற்றிய பணிகள், செய்து கொண்டு இருக்கின்ற காரியங்கள் என்ன என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
பொறுப்பேற்ற நேரத்திலே கரோனா என்ற கொடிய தொற்றுநோய், ஏறக்குறைய 50,000-த்தை தொடக்கூடிய நிலையில் போய் கொண்டிருந்தது. ஆகவே, பொறுப்பேற்ற உடனேயே அதை கட்டுப்படுத்துகின்ற முயற்சியில் தான் நாங்கள் அத்தனைபேரும் முழுமையாக ஈடுபட்டோம். அது உங்களுக்கு தெரியும். நான்
வேடிக்கையாக அல்ல, உண்மையாக சொல்ல விரும்புவது, இன்றைக்கு நான் முதலமைச்சராக இருக்கிறேன், சேகர்பாபு அறநிலையத் துறை அமைச்சராக இருக்கின்றார், ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.
பொறுப்பேற்றதும் அந்த துறையை நாங்கள் கவனிக்கவில்லை, எல்லோரும் சேர்ந்து மருத்துவத்துறை தான் கவனித்தோம். பலபேரிடம் நான் சொன்னது உண்டு. நான் உட்பட எல்லோரும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகத்தான் வேலை பார்த்து கொண்டு இருக்கிறோம். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வேலையைத் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இன்னும் அது முடிந்தபாடு இல்லை. ஓரளவுக்கு கட்டுப்படுத்தி இருக்கிறோம்.
சென்னையை பொறுத்தவரைக்கும், நம்முடைய மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்று மற்றும் நம்முடைய அரசு துறை அதிகாரிகள் எல்லாம் பொறுப்பேற்றுக் கொண்டு, இரவுபகல் பாராமல் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள், எல்லோரும் ஒன்று சேர்ந்து, கட்சியை பார்ப்பது இல்லை, அரசியல் பார்ப்பது இல்லை, என்னுடன் பேசுகிற ஒரு சகோதரர் சொன்னார். வாக்களித்தவர்கள் இவர்களுக்கு ஓட்டு போட்டோமே என்று
மகிழ்ச்சி அடைய வேண்டும். அதேபோல வாக்களிக்க தவறியவர்கள் அய்யோ இவர்களுக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என்று கவலைப்பட வேண்டும். அப்படி நம்முடைய பணி இருக்கும் என்று உறுதிமொழி சொல்லி அந்த பதவியை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அந்த பதவி என்று சொல்ல மாட்டேன், பொறுப்பு, இதுதான் கலைஞர் அவர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். நான் மேயராக இருந்த போதும் அதைத்தான் சொன்னேன், துணை முதலமைச்சராக இருந்த போதும் அதைத்தான் சொன்னேன், எதிர்கட்சி தலைவராக இருந்த போதும் அதைத்தான் சொன்னேன், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போதும் அதைத்தான் சொன்னேன், இப்போதும் அதைத்தான் சொல்கிறேன், இது பதவி அல்ல பொறுப்பு. மக்கள் தந்திருக்கக்கூடிய பொறுப்பு. ஆக அந்த பொறுப்பை உணர்ந்து, நாங்கள் எங்களுடைய கடமையை, உங்கள் ஒத்துழைப்போடு, ஆதரவோடு ஆற்றிக் கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட நிலையில் தான் நாங்கள் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com