ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மக்கள் நீதி மய்யத்துக்கு புதிய நிர்வாகிகள்: ஆலோசகராக பழ.கருப்பையா நியமனம்

மக்கள் நீதி மய்யத்திற்கு புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியல் ஆலோசகராக பழ.கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் (கோப்புப்படம்)
Updated On :26 ஜூன் 2021, 6:50 am

DIN

மக்கள் நீதி மய்யத்திற்கு புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியல் ஆலோசகராக பழ.கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தை சேர்த்த ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த மாநில நிர்வாகிகளான சந்தோஷ் பாபு, குமரவேல் உள்ளிட்ட பலர் விலகினார்கள்.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகளை நியமித்து இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கட்சியின் அரசியல் ஆலோசகர்களாக பழ.கருப்பையா மற்றும் பொன்ராஜ், துணைத் தலைவர்களாக ஏ.ஜி.மெளரியா மற்றும் தங்கவேலு, மாநில செயலாளர்களாக செந்தில் ஆறுமுகம், சிவ.இளங்கோ மற்றும் சரத்பாபு, நிர்வாக குழு உறுப்பினர்களாக ஸ்ரீப்ரியா சேதுபதி, நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளராக ஜி.நாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.