‘சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம்’: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் 20 நாள்களில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் 20 நாள்களில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

டெல்டா வகையிலிருந்து உருமாறிய டெல்டா பிளஸ் வகை கரோனாவால் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ள நிலையில், தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரிசோதனை மாதிரிகளை புணேவில் உள்ள மரபணு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி முடிவுகளை பெற தாமதமாவதால், தமிழகத்தில் விரைவில் மரபணு சோதனை செய்யும் மையம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்னும் 20 நாள்களில் சென்னையில் டெல்டா பிளஸ் வகையை கண்டறியும் மரபணு பரிசோதனை மையம் அமைக்கப்படும் என திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும்,  மூன்றாம் அலை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க போதிய மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com