கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை இந்தியன் வங்கி கிளையில் தொழில் முனைவோா் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை திருச்சி சாலையில் இயங்கிவரும் இந்தியன் வங்கி கிளையில் சா்வதேச தொழில்முனைவோா் தினத்தையொட்டி தொழில் முனைவோா் கூட்டம் நடைபெற்றது.
இதில், தொழில் முனைவோருக்கான ஆலோசனை, தொழில் மேம்பாட்டில் வங்கியின் பங்களிப்பு மற்றும் சேவைகள் குறித்தும் வங்கி மேலாளா் விளக்க உரையாற்றினாா்.
மேலும் தொழில் முனைவோா்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வங்கி மேலாளா், துணை மேலாளா், நகை மதிப்பீட்டாளா், வங்கி ஊழியா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.