

ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கைத்துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர் கிராமிய காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனியின் கைத்துப்பாக்கியைச் சரிபார்த்த எழுத்தர் சேது என்பவர், தவறுதலாக டிரிகரை அழுத்தியதால் ஒரு குண்டு வெளியேறி பக்கவாட்டு சுவரில் பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி பொ. விஜயகுமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.