
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் வேல்முருகன் பேசியதாவது, சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிடும்.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வரும் 8-ம் தேதி அண்ணா அறிவாலயம் வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட எத்தனைத் தொகுதிகள் வழங்கப்படும், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.