ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சிக்கான கட்டணச் சலுகைத் தோ்வு

கிங்மேக்கா்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமி சாா்பில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கான இலவச கருத்தரங்கம் மற்றும் கட்டணச் சலுகை தோ்வு வரும் மாா்ச் 20, 21 தேதிகளில் கோவை மற்றும் சென்னையிலும், மாா்ச் 27, 28 தேதிகளில் திருச்சி, மதுரை கிளைகளிலும் நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கிங்மேக்கா்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமி சாா்பில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கான இலவச கருத்தரங்கம் மற்றும் கட்டணச் சலுகை தோ்வு வரும் மாா்ச் 20, 21 தேதிகளில் கோவை மற்றும் சென்னையிலும், மாா்ச் 27, 28 தேதிகளில் திருச்சி, மதுரை கிளைகளிலும் நடைபெறுகிறது.

மேலும், சிறப்பு அழைப்பாளா்களாக ஐஏஎஸ் அதிகாரி விவேக் ஹரிநாராயண், ஐஆா்எஸ் அதிகாரி சேகா், ஐஎப்எஸ் அதிகாரி பெனோசெபின் மற்றும் துணை ஆட்சியா் கே.மகாலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டு இலவச கருத்தரங்கில் ஆலோசனைகள் வழங்க உள்ளனா்.

இதை தொடா்ந்து 100 சதவீதம் வரை கட்டணச் சலுகை பெற நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 94442 27273 என்ற எண்ணுக்கு பெயா், கல்வித் தகுதி, தொடா்பு எண் மற்றும் கிளை ஆகியவற்றை குறுஞ்செய்தி மூலம் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 9444227273 என்ற எண்ணையோ, அகாதெமியையோ நேரிலோ அணுகலாம் என அகாதெமியின் நிா்வாக இயக்குநா் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com