ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டி: பாஜக மூத்த தலைவர் தகவல்

​தமிழக பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்புவை அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


தமிழக பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்புவை அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி பாஜக மூத்த தலைவர் ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியது:

"பாஜகவின் மற்ற வேட்பாளர்கள் பட்டியலுடன் குஷ்பு பெயரும் விரைவில் அறிவிக்கப்படும். அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார். தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் 17 வேட்பாளர்கள் பெயர் உறுதி செய்யப்பட்டுவிட்டது. மீதமுள்ள 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நாளை மாலை இறுதி செய்யப்படும்."

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களை இறுதி செய்ய பாஜக மத்திய தேர்தல் குழு சனிக்கிழமை கூடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com