ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்: கோபண்ணா

கரூர் எம்.பி. ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
படம்: சுட்டுரை
படம்: சுட்டுரை


கரூர் எம்.பி. ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:

"ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்துகிற ஜோதிமணி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2016 கரூர் சட்டமன்றத் தேர்தலில் 401 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த  பேங்க் சுப்பிரமணியத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சண்டித்தனம் செய்து பழிவாங்கிய ஜோதிமணி தொண்டர்களுக்காக ரத்தம் கொதிப்பதாக கூறுவுது ஒரு அரசியல் மோசடி.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொகுதி, வேட்பாளர் தேர்வு பல்வேறு கட்டங்களாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றுள்ளன. தனிப்பட்ட எந்த தலைவரும் முடிவெடுக்க முடியாத நிலையில் எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லாத ஜனநாயக நடைமுறையை கொச்சைப்படுத்துவது அப்பட்டமான கட்சி விரோத செயல் அல்லவா?"

முன்னதாக, வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லை என ஜோதிமணி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com