
தமிழகத்தில் 2-ம் நாளாக கரோனா பாதிப்பு இன்று மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 85,350 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் இன்று புதிதாக 2,194 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 79,473 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,270 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
இதனால், வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 53 ஆயிரத்து 733 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவா்களில் இன்று 11 போ் உயிரிழந்துள்ளனா். இதனால், கரோனா உயிரிழப்பு 12,670 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 13,070 போ் சிகிச்சையில் உள்ளனா். சென்னையில் இன்று 833 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது அலையில் தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. முகக் கவசம் அணிவதை பலரும் பெரிதாக விரும்பாத காரணமே பாதிப்பு இந்த அளவிற்கு மீண்டும் அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது. முதல் அலையைவிட இரண்டாவது அலையின் தாக்கம் எப்படிஇருக்கும் என்ற அச்சமும் மக்களிடம் அதிகரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.