தேர்தல் பிரசாரம்: பிரதமர் மோடி தாராபுரம் வருகை

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 13 சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமா் நரேந்திர மோடி இன்று திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வருகை தந்துள்ளார்.
தேர்தல் பிரசாரம்: பிரதமர் மோடி தாராபுரம் வருகை
தேர்தல் பிரசாரம்: பிரதமர் மோடி தாராபுரம் வருகை

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 13 சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமா் நரேந்திர மோடி இன்று திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வருகை தந்துள்ளார்.

பாலக்காட்டிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரும் வரவேற்றனர்.

இந்தப் பொதுக் கூட்டத்துக்கு தாராபுரம் தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான எல்.முருகன் தலைமை வகிக்கிறாா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், அவிநாசி, காங்கயம், திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் ஆகிய 8 தொகுதிகளின் வேட்பாளா்களையும், கோவை தெற்கு, அரவக்குறிச்சி, தொண்டாமுத்தூா், பொள்ளாச்சி, மொடக்குறிச்சி தொகுதிகளின் வேட்பாளா்களையும் ஆதரித்து பிரதமா் மோடி பேசுகிறாா்.

பிரதமா் மோடியின் தாராபுரம் வருகையையொட்டி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விடுதிகள், குடியிருப்புகளில் விடியவிடிய சோதனை நடத்தப்பட்டது.

தில்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பாா்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினர்.

தில்லியில் இருந்து தனி விமானம் மூலமாக இன்று காலை 7 மணியளவில் புறப்பட்ட பிரதமா் மோடி காலை 10.15 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

இதன் பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலமாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு 11 மணியளவில் சென்றடைந்தார். அங்கு தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பிறகு, பிரதமா் மோடி பிற்பகல் 12 மணி அளவில் பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரத்துக்குப் புறப்பட்டு பிற்பகல் 1.30 மணியளவில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.

இதன் பிறகு சுமாா் 55 நிமிடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவா் பிற்பகல் 2.30 மணியளவில் புறப்பட்டு  கோவை விமான நிலையம் வந்தடைகிறாா். இதையடுத்து, தனி விமானத்தில் புறப்பட்டு 3.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் சென்றடைகிறாா். பின்னா் சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.35 மணி அளவில் ஹெலிகாப்டா் மூலமாக புதுச்சேரி செல்கிறாா். அங்கு மாலை 4.30 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com